250 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் : அனற் யூலியற் புஸ்பராஜா குடும்பத்தினருக்கு நன்றிகள் 10.01.2021

 இயற்கை அமைப்பின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டம்



COVID 19 காலப்பகுதியில் கல்வி நிலையிலும் பொருளாதார நிலையிலும் மிகப்பெரும் வீழ்ச்சியை உலகநாடுகள் சந்தித்திருக்கும் நிலையில் தற்போது மாணவ சமூகத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே உள்ளது 

அந்தவகையில் ஈழத்தை பொறுத்தவரையில் பாடசாலைகள் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வாழ்வாதாரம் குறைந்த பொருளாதார நிலையில் வீழ்ச்சிகண்ட நிலையில் பல மாணவர்கள் கல்வியை மீளவும் தொடரமுடியாத நிலையே காணப்படுகின்றது 

ஆகவே அவ்வாறான சில மாணவ சமுதாயத்திற்கு சில கல்விச் செயற்திட்ட உதவிகள் இன்றியமையாதனவாகும் 

அதனை அடிப்படையாக கொண்டு இயற்கை அமைப்பினரால் 250 மாணவர்கள் வெவ்வேறு பகுதிகளிலும் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கான கல்வி உபகரணங்கள் புலம்பெயர் உறவு திரு திருமதி  அனற் யூலியற் புஸ்பராஜா குடும்பத்தினரது பெயாரால் திரு தர்மகுலசிங்கம் அவர்களால் நேரடியாக சென்று வழங்கப்பட்டது 

ஆகவே எம் மாணவ சமூகத்தினருக்கு தமது அளப்பரிய உதவியை வழங்கிய புலம்பெயர் உறவு திரு திருமதி அனற் யூலியற் புஸ்பராஜா குடும்பத்தினருக்கு எமது இயற்கை அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 



















No comments:

Post a Comment

Pages