இயற்கை அமைப்பின் " கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டம் " - திகதி 04.07.2020
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட புளியடிச்சோலை கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தொகுதியில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மாணவர்களின் கல்வி அடைவுமட்டத்தை உயர்த்தும் நோக்குடன் ஓர் நூலகம் ஒன்றினை ஆரம்பிக்க தீர்மானித்தனர். அந்தவகையில் அவ் நூலகத்திற்கு தேவையான கல்வி செயற்பாட்டிற்கு பயன்படும்வகையிலான புத்தகங்களை இயற்கை அமைப்பினூடாக தந்துதவுமாறு கோரியதன் அடிப்படையில் 700ற்கும் மேற்பட்ட கல்விசார் நூல்கள் கொடையாளர்களிடம் பெற்று இயற்கை அமைப்பின் சார்பில் நானும் சட்டத்தரணி பிரியங்கா அவர்களும் நேரடியாக கொண்டுசென்று வழங்கியதில் மனநிறைவடைகின்றோம்
அந்தவகையில் புத்தகங்களை தந்துதவிய
கிலறி - நோர்வே
தேவைநாடும் மகளிர் அமைப்பு - மல்லாகம்
நிமலன் - நியூஸ்ரார் அக்கடமி காரைநகர்
சக்திதாசன் - டென்மார்க்
சுதுமலை தெற்கு எச்சாட்டி ஞானவைரவர் ஆலயம்
நிக்சன் - Maliban sales executive வடக்கு மாகாணம்
றஜித் - றோயல் புத்தகசாலை
ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்
நன்றி
No comments:
Post a Comment