10 குடும்பங்களுக்கான இடர்க்கால உதவி : றஜனி சிவஞானம்



இடர்க்கால கரங்கொடுப்பு சேவையில் யாழ் மண்ணை நோக்கிய புலம்பெயர் உறவுகளின் மனிதநேயப் பார்வை
புலம்பெயரில் வசிக்கும் #றஜனி_சிவஞானம் அவர்கள் தற்போதைய உலகநாடுகளின் அசாதாரண சூழ்நிலையையும் மக்களின் பசிப்பிணியையும் கருத்தில் கொண்டு ஈழத்து மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
இதன் அடிப்படையில் வாழ்வாதாரம் இழந்த #10 குடும்பங்களுக்கான நிறைவான உலருணவுப் பொருட்களை வழங்குவதற்காக உணவுப்பொதிகளை வழங்கியிருந்தனர்
செல்வி பிரியங்கா (சட்டத்தரணி) ஊடாக இயற்கை அமைப்பினரும் இணைந்து யாழ் மாவட்டத்தின் சில பிரதேசங்களை மையப்படுத்திய 10 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் செயற்திட்டம் (15.06.2020) அன்று முன்னெடுக்கப்பட்டது.
தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்ட உதவிபெறும் பயனாளர்களில் மிகவும் வருமானம் குறைந்த குடும்பங்கள் பகுப்பாய்வு முலம் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரண பொதிகள் றஜனி சிவஞானம் பெயரால் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இயற்கை அமைப்பினரால் அடையாளம்காட்பட்ட பயனாளிகளுக்கு உதவிகளை வழங்க முன்வந்த றஜனி சிவஞானம் அவர்களுக்கு இயற்கை அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்

No comments:

Post a Comment

Pages