அன்ற் யூலியற் புஸ்பராஜா தம்பதியினரின் குடும்பத்தினால் 100 குடும்பங்களுக்கான இடர்க்கால உதவித்திட்டம்


கொரோனா நோயினால் உலகமே நிற்கதியில் நிற்கும் நிலையில் மனிதாபிமான உதவிகளே இன்னமும் மனிதகுலத்தை காத்துநிற்கின்றது 
அந்த வகையில் ஈழத்தமிழரின் இதயமாம் யாழ் மண்ணில் கொரோனா தாக்கமும் அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக  அரசினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து உண்ண உணவின்றி பசிப்பிணியை போக்க வழிதெரியாது தவித்திருக்கும் தருணங்களில் பலரது மனிதாபிமான உதவிகளே இன்னமும் யாழ்ப்பாண மக்களை நிலைகொள்ளச் செய்கின்றது.
இருப்பினும் பலருக்கு பலவிதமான உதவிகள் கிடைக்கப்பெற்றாலும் இன்னமும் பாராமுகமாக பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. அரசினால் வழங்கப்படுகின்ற சலுகைகள் தவிர்ந்த பிற உதவிகள் கிடைக்கப்பெறாத 
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்கப்படவேண்டுமென திரு தர்மகுலசிங்கம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க புலம்பெயர் உறவு திரு திருமதி அனற் யூலியற் புஸ்பராஜா குடும்பத்தினர் தாமாக முன்வந்து இச் சேவையை முன்னெடுத்துள்ளனர் 
தர்மகுலசிங்கம் அவர்களது மகள் செல்வி பிரியங்கா (சட்டத்தரணி) ஊடாக இயற்கை அமைப்பினரும் இணைந்து யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களை மையப்படுத்திய 100 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாவற்குழி தாவடி ஆணைக்கோட்டை கட்டுடை ஆகிய பகுதிகளில் மிகவும் வருமானம் குறைந்த குடும்பங்கள் பகுப்பாய்வு முலம் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரண பொதிகள் திரு திருமதி அனற் யூலியற் புஸ்பராஜா தம்பதியினரின் பெயரால் திரு தர்மகுலசிங்கம் அவர்களினால் நேரடியாக பயனாளிகள் வீடு சென்று வழங்கப்பட்டது.
அந்த வகையில் இயற்கை அமைப்பினரால் அடையாளம்காட்பட்ட பயனாளிகளுக்கு உதவிகளை வழங்க முன்வந்த திரு திருமதி அனற் யூலியற் புஸ்பராஜா தம்பதியினர் குடும்பத்தினருக்கு இயற்கை அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் 

No comments:

Post a Comment

Pages