இயற்கை அமைப்பின் " மரநடுகைப் பயணம்" - 30.11.2018



'இயற்கை' சமூகசேவை அமைப்பானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் சமூகசேவை திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயற்கை தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதத்தில் இறுதி நாளாகிய இன்று 30.11.2018 திகதி மரம் வளர்த்தலின் அவசியம் மற்றும் இயற்கை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு சண்டிலிப்பாய் பிரதேசத்திற்குட்பட்ட 35 பொது இடங்களில் நிழல் மற்றும் பயன் தரும் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
குறிப்பாக, இயற்கை அமைப்பானது வழிகாட்டி மற்றும் தமிழ் TV என்பவற்றுடன் இணைந்து மாபெரும் செயற்றிட்டமாக மேற்கொண்டுள்ளதுடன் மானிப்பாய் Rotract , மானிப்பாய் லியோக் கழகத்தினரும் எம்முடன் இணைந்து கைகோர்த்தனர்.
பாடசாலைகள், தேவாலயங்கள், இந்து ஆலயங்கள், பிரதேச சபை, பொலிஸ் நிலையம், ஆயுள்வேத வைத்தியசாலை என்பன எமது கோரிக்கைக்கு இணங்க மரம் நடுவதற்குரிய இடங்களை இனங்காட்டியதுடன் முறையான வகையில் ஒத்துழைப்பினையும் வழங்கியுள்ளார்கள்.
உங்கள் அனைவருக்கும் இயற்கை அமைப்பினராகிய எங்களுடைய இதயபூர்வமான நன்றிகள்.

























No comments:

Post a Comment

Pages