இயற்கை அமைப்பின் ஊடாக V.S.B.PIRASANTH ( Director - WINSTAR CONSULTANTS PVT-LTD ) அவர்களின் பூரண அனுசரணையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த வாழைமரங்கள் வழங்கும் பசுமை உருவாக்கல் செயற்திட்டம் கடந்த 31.04.2018 மாலை 4.00 மணியளவில் மடத்தடி சண்டிலிப்பாயில் அமைந்துள்ள இயற்கை அலுவலகத்தில் நடைபெற்றது. இயற்கை அமைப்பின் உறுப்பினர் செல்வன் செ.தர்சிகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரு ஸ்ரீரங்கன் ( கிராம சேவகர் சண்டிலிப்பாய் மாத்தி J/142 ) அவர்களும் தவிசாளர் ஜெபநேசன் அவர்களும் வருகைதந்திருந்தனர்.
மேலும் இவ் செயற்திட்டத்திற்கு பூரண அனுசரணை வழங்கிய V.S.B.PIRASANTH அவர்களும் அந் நிறுவன பணியாளர்களான S.கௌதமி , J.மதுரா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்தனர்.
மேலும் நடைபெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் இறைவணக்கம் தலைமை உரையினைத் தொடந்து சிறப்பு விருந்தினர் ஸ்ரீரங்கன் ( கிராமசேவகர் ) அவர்களால் மக்களுக்கு நம் இயற்கை வளம் குறித்தும் , அன்றாட இயற்கை பயன்பாடுகள் குறித்தும் சிறு உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வின் ஸ்டார் நிறுவனத்தின் சார்பாக மதுரா அவர்கள் இயற்கையின் சிறப்பு , பயன்பாடு என்பது குறித்து சிற்றுரை ஆற்றியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கிராமசேவகர் அவர்களினால் இவ் செயற்திட்ட அனுசரணையாளர் V.S.B.PIRASANTH ( Director - WINSTAR CONSULTANTS PVT-LTD ) அவர்களுக்கு பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டு இயற்கை அமைப்பின் சார்பாக நினைவுச் சுவடு ஒன்றும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இயற்கை அமைப்பின் அலுவலக கட்டட உரிமையாளர் திரு யோகராஜா அவர்களுக்கும் கிராம சேவகர் அவர்களினால் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டது.
தொடர்ந்து செயற்திட்ட அனுசரணையாளர் அவர்களினால் இயற்கை அமைப்பின் ஊழியர்களுக்கு சிறு அன்பு பரிசு வழங்கப்பட்டது.
அடுத்து நன்றி உரையினைத் தொடர்ந்து செயற்திட்டத்தின் முக்கிய நிகழ்வான வாழைமரங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பு விருந்தினர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது
இவ் பசுமை உருவாக்கல் செயற்திட்டத்தில் 80 - 115 வரையான பயனாளிகள் வாழைமரங்களை பெற்றுச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செயற்திட்டத்திற்கு தமது பூரண அனுசரணையை வழங்கிய V.S.B.PIRASANTH ( Director - WINSTAR CONSULTANTS PVT-LTD ) அவர்களுக்கு இயற்கை அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
No comments:
Post a Comment