இயற்கை அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்ட இயற்கைப் பாவனைப்பொருள் உற்பத்தி தொழிற்பயிற்சி
இயற்கை அமைப்பினால் கடந்த 03.06.2018 அன்று மாலை 3 மணியளவில் நடாத்தப்பட்ட இயற்கை உற்பத்தி தொழில் பயிற்சி நிகழ்வில் சண்டிலிப்பாய் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட 10 யுவதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான இயற்கை உற்பத்தி தொழில் பயிற்சி வழங்கப்பட்டது
இதன் அடிப்படையில் மூலிகைகளை உரிய முறையில் பயன்படுத்தி எவ்வாறு தன்னிறைவு உற்பத்திகளை நாம் வீட்டிலேயே மேற்கொள்ளலாம் என்ற விளக்கமும் செய்முறை விளக்கங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
பற்களை வலிமையாக பாதுகாக்க பற்பொடி
தேங்காய் எண்ணையில் வீட்டிலேயே தயாரிக்கும் பலவகை சவர்க்காரம்
முடி மற்றும் தலையை பாதுகாக்கக்கூடிய மூலிகை எண்ணை
முக அழகை பேணுவதற்கும் , பருக்கள் , தேமல்கள் மற்றும் இன்னோரன்ன தோல் நோய்களில் இருந்தும் பாதுகாக்க மூலிகை பொடி தயாரிக்கும் முறை
என்ற சில சிறு தேவைப்பொருட்களை நாமே எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த விளக்கம் மற்றும் செய்முறை விளக்கம் என்பனவும் வழங்கப்பட்டிருந்தது
No comments:
Post a Comment