காரைநகர் வாழ் சமூகத்தின் அடிப்படை நீர் தேவைக்காய் சிந்தித்த நண்பன் ஜெயபிரதீப்


காரைநகர் பகுதி அண்மைக்காலமாக அத்தியாவசிய தேவையான குடிநீர் பற்றாக்குறையினை அதிகம் சந்தித்துவந்தது. பல அரசியல் பிரமுகர்கள் அதற்கான தீர்வை வழங்குவதாக கூறி அரசியல் நடத்திவந்தனர் ( கூறியவர்களுக்கு மட்டும் ) அத்தோடு தண்ணீர் வியாபாரமாகவும் உருவெடுத்தமையை காணக்கூடியதாக இருந்தது. பலர் இதுசம்பந்தமாக கருத்து கூறுநர்களாகவே இருந்தனர். நிரந்தர தீர்வை வழங்க எவரும் முன்வரவில்லை. 
ஆனால் நண்பன் ஜெயபிரதீப் சிறு முயற்சியை மேற்கொண்டிருந்தார். காரைநகர் பகுதியில் நன்நீர் பகுதிகளை இனம்காணும் முயற்சியே அது.
அதாவது குறித்த காரைநகர் பகுதியில் காணப்படுகின்ற குடிநீர் கிணறுகள் , குளங்கள் குறித்த தகவல்கள் நேரடியாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குறித்த பகுதி நீர்வள நிலைகுறித்த சரியான தகவல்கள் திரட்டப்பட்டது. மற்றும் அவை மக்கள் பாவனைக்கு கொடுக்கப்படாத காரணங்களும் அறியப்பட்டன. 
இவைகுறித்த தகவல்கள் பலரை சென்றடைந்தது 
அதன் விளைவாக பல அச்சுறுத்தல்களையும் , பல மிரட்டல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டும் நண்பன் தனது முயற்சியை கைவிடவில்லை . தற்போது அதன் விளைவாக காரைநகர் பகுதியில் குறித்த நீர்நிலைகள் காரைநகர்வாழ் மக்களாலும் சமூக அமைப்புகளாலும் புனர்நிர்மானிக்கப்பட்டு மக்கள் தேவைக்காய் கையளிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவருகின்றன 
ஆகவே இவ் இயற்கைவள நிலையில் அக்கறைகொண்டு நிகழ்கால, எதிர்கால சந்ததியின் அடிப்படைத் தேவைக்காய் சிந்தித்த நண்பன் ஜெயபிரதீப் அவர்களுக்கு இயற்கை அமைப்பின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

No comments:

Post a Comment

Pages