அக்ஷய திருதியை திருநாளை உரிய முறையில் இயற்கை அமைப்பின் மூலம் நிறைவேற்றிய புலம்பெயர் சகோதரி கோபிகா குடும்பத்தினர்



அக்ஷய திருதியை என்னும் தினம் செல்வம் பெருக எம்மவர் பின்பற்றும் ஓர் திருநாள். ஆனால் இவ் நாளினை மக்கள் தவறான முறையிலேயே கடைப்பிடிக்கின்ற தன்மை கவலைக்கிடம். 
அதாவது அக்ஷய திருதியை நாளில் வறியவர்களுக்கு வயிறார உணவளிப்பதன் மூலமே அவர்கள் செல்வம் செழித்து வாழ்வார்கள் என கொண்டாடப்பட்ட ஓர் தினமாகும். ஆனால் நகைக்கடை வியாபாரிகள் தமது சுய லாபத்திற்காக இத் திருநாளை தவறான முறையில் பின்பற்ற மக்களைப் பழக்கப்படுத்திவிட்டனர் . அதாவது அன்றைய தினம் நகை வாங்குவதன் மூலம் அவர்களுக்கு செல்வம் செழிக்கும் என வதந்தியை பரப்பி அந்த நாளையே தமக்கு சாதகமாக்கிவிட்டனர். 
ஆனால் இன்று அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.
அதாவது இன்று அக்ஷயை திருதியை திருநாள் சரியான முறையில் கனடா தமிழ் சகோதரி கோபிகா அவர்களால் எமது அமைப்பின் மூலம் வறிய சிறு குடும்பத்திற்கு 2 வாரத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டது. இவ் சிறு உதவி உண்மையில் மாற்றத்தை உண்டாக்கிய மகிழ்ச்சி.
அன்பு புலம்பெயர் சகோதரி கோபிகா அவர்களுக்கு எமது இயற்கை அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

No comments:

Post a Comment

Pages