சிறுவர்களுக்கான இயற்கையோடு ஒன்றிய வாழ்வு எனும் கருப்பொருளில் செயன்முறை செயற்திட்ட கருத்தமர்வு
இயற்கை அமைப்பினூடாக ஞாயிற்றுக்கிழமை 08.04.2018 அன்று சிறார்களிடத்தில் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையை விருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளில் செயற்றிட்டம் நடைபெற்றது.
இதன் அடிப்படையில் மாலை கட்டுதல் தோரணம் கட்டுதல் மற்றும் கோலம் போடுதல் போன்ற நிகழ்வுகளும், சிறுவர் சமையலும் தொடர்ந்து ஒற்றுமையான மனப்பாங்கை ஏற்படுத்தும் முகமாக பகிர்ந்துண்ணலும் இடம் பெற்றது.
52 சிறுவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கு பற்றி பரிசில்களும் பெற்றுக் கொண்டனர்.
மற்றும் நிகழ்வில் பங்கு பற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment